நியூயார்க்: அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை அமர்வில் பங்கேற்பதற்காக நியூயார்க் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கு நேபாள பிரதமர் கே.பி. ஒளி, குவைத் இளவரசர் ஷேக் சபா காலித் அல் ஹமத் அல் சபா, பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினார்.
மஹ்மூத் அப்பாஸுடனான சந்திப்பின் போது, பாலஸ்தீன மக்களுக்கு இந்தியாவின் உறுதியான ஆதரவை வெளிப்படுத்தினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “நியூயார்க்கில் அதிபர் மஹ்மூத் அப்பாஸை சந்தித்தேன்.
பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பதற்கு இந்தியாவின் ஆதரவை நான் மீண்டும் வலியுறுத்தினேன். பாலஸ்தீன மக்களுடனான நீண்டகால நட்பை மேலும் வலுப்படுத்துவது குறித்து நான் கருத்துகளை பரிமாறிக் கொண்டேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, இந்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், “ஐ.நா., பொதுச் சபை நிகழ்ச்சியின் நடுவே, பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். அப்போது, காஸாவில் நிலவும் மனிதாபிமான நெருக்கடி குறித்து, பிரதமர் ஆழ்ந்த கவலை தெரிவித்தார்.
மற்றும் பிராந்தியத்தில் மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமை, “தொடர்ந்து மனிதாபிமான உதவி உட்பட பாலஸ்தீன மக்களுக்கு இந்தியாவின் அசைக்க முடியாத ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தியது.
மேலும், இஸ்ரேல், பாலஸ்தீனத்தை இரு நாடுகளும் அங்கீகரிப்பது பிரச்னைக்கு தீர்வு தரும், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே போர் நிறுத்தம், பணயக்கைதிகளை விடுவித்து பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.