அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ‘நிம்பஸ்’ என்ற புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் மக்கள் மத்தியில் மீண்டும் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸ் தொண்டையில் கத்தி குத்துவது போன்ற வலியைக் காண்பிக்கிறது. இதன் பாதிப்பில் உள்ளோரில் 37% பேர் இதே வகை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

2020ஆம் ஆண்டு கொரோனா உலகெங்கும் பேரழிவை ஏற்படுத்தியது. பின்னர் தடுப்பூசிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மூலமாக அதன் தாக்கம் குறைந்தது. ஆனால் தற்போது சில நாடுகளில் மீண்டும் புதிய வகை கொரோனா பரவத் தொடங்கியுள்ளது. இதில் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட நிம்பஸ் வகை பரவல், கடுமையான தொண்டை வலி, குரல் மாற்றம் போன்ற அறிகுறிகளை உள்ளடக்கியுள்ளது.
இந்த புதிய வைரஸ் அமெரிக்காவைத் தவிர, சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளிலும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் உலகம் முழுவதும் புது அச்சம் உருவாகியுள்ளது. மருத்துவ நிபுணர்கள் இந்த வைரஸின் தன்மை மற்றும் பரவல் வேகத்தை கவனித்து வருகின்றனர்.
இந்த நிலையை ஒட்டி பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக முககவசம், சமூக இடைவெளி மற்றும் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பும் இந்த வைரஸை கண்காணித்து வருகிறது. புதிய வகை கொரோனா தடுப்பூசி தேவையும் தற்போது ஆராயப்பட்டு வருகிறது.