இஸ்லாமாபாத்: சுகாதாரம், வர்த்தகம், தொழில்துறை ஒத்துழைப்பு, கல்வி மற்றும் பிற துறைகளை உள்ளடக்கிய எட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பாகிஸ்தான் மற்றும் ரஷ்யா அரசுகளுக்கு இடையே நேற்று முன்தினம் கையெழுத்தானது.
ரஷ்யாவுக்கான பாகிஸ்தான் தூதர் முகமது காலித் ஜமாலி, ரஷ்யாவையும் மத்திய ஆசியாவையும் இணைக்கும் 7,200 கிமீ ரயில் திட்டத்தில் சேர பாகிஸ்தான் தயாராக இருப்பதாக ரஷ்ய தொலைக்காட்சியான ரஷ்யா டுடேவிடம் தெரிவித்தார்.
ரஷ்யாவில் இருந்து பாகிஸ்தானுக்கு சரக்குகளை ஏற்றிச் செல்லும் சரக்கு ரயிலின் சோதனை ஓட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் தொடங்கும் என்று பாகிஸ்தானின் எரிசக்தி அமைச்சர் அவாய்ஸ் அகமது கான் லெகாரி ரஷ்யா டுடேயிடம் தெரிவித்தார்.