ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படைகள் பயங்கரவாத அமைப்புகளை எதிர்த்து போராடி வருகின்றன. சமீபத்தில், காஷ்மீரில் பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை ஊக்குவித்து, சமூக வலைதளங்கள் மூலமாக ஆட்சேர்ப்பு நடத்தும் பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் சதி திட்டம் அம்பலமாகியுள்ளது.
இந்த சதி திட்டத்தின் மூலம், பாகிஸ்தான் அமைப்புகள் சமூக ஊடகங்களில் அதிகளவில் பதிவுகளை வெளியிட்டு, இந்தியாவிற்கு எதிரான அச்சுறுத்தல்களை பெருக்கி வருகின்றன. இது இளைஞர்களை பயங்கரவாதத்தில் ஈடுபடுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது என பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த செயற்பாடுகளை தடுக்க மத்திய அரசு கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதால், கடந்த ஆண்டுகளை விட பயங்கரவாத அமைப்புகளில் சேருபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.