ஹைதி: ஹைதியில் தலைவிரித்தாடும் வன்முறையால் பொதுமக்கள் வெகு அச்சத்தில் உள்ளனர்.
கரீபிய நாடான ஹைதியில் வன்முறை கும்பல் நடத்திய தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர். ஆயுதம் ஏந்திய கும்பல், தலைநகர் போர்ட் ஓ பிரின்ஸில் வன்முறையில் ஈடுபட்டு வருகிறது.
பொதுமக்களை பிடித்து உயிருடன் எரிப்பது, சுட்டுக் கொல்வது என வன்முறை தலைவரித்தாடுகிறது. தற்போது, அந்த கும்பல் டெல்மாஸ் நோக்கி முன்னேறுவதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுவரை 10 லட்சம் பேர் வேறு இடங்களுக்கு நகர்ந்துள்ளனர்.