பாகிஸ்தான், 2035க்குள் நிலவில் தனது தடம் பதிக்க வேண்டும் எனக் குறிக்கோள் வகுத்துள்ளது. இதற்காக சீனாவின் ஆதரவை நாடி வருகிறது. பாகிஸ்தானின் விண்வெளி அமைப்பு ‘சுபார்கோ’, இதுவரை தானாக எந்த செயற்கைக்கோளையும் ஏவவில்லை என்றாலும், சீனாவின் துணையுடன் எட்டு செயற்கைக்கோள்களை ஏவியுள்ளது.

சீனாவுடன் கூட்டணி
பாக். அமைச்சர் அஹ்சன் இக்பால், சீனாவின் அணுசக்தி மற்றும் விண்வெளி முகமையின் தலைவரை சந்தித்து, இணைந்து பணியாற்ற வேண்டியதைக் கூறினார். 2028ல் சீனாவின் Chang’e-8 திட்டத்தில் பாகிஸ்தான் 35 கிலோ ‘ரோவர்’ ஒன்றை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. இது தென் துருவத்தில் அறிவியல் ஆய்வுகள் மேற்கொள்ளும்.
முதல் பாக் விண்வெளி வீரர்
அடுத்த ஆண்டில் பாகிஸ்தான் முதல் முறையாக தனது விண்வெளி வீரரை சீனாவின் விண்வெளி நிலையத்துக்கு அனுப்பும் திட்டம் உள்ளது. இது அந்த நாட்டின் விண்வெளி வளர்ச்சிக்கு புதிய ஆரம்பமாக கருதப்படுகிறது.
உலக தரவரிசை மற்றும் பின்னணி
விண்வெளியில் செயற்கைக்கோள்கள் அனுப்பிய நாடுகளில் அமெரிக்கா 8,530 செயற்கைக்கோள்களுடன் முதலிடத்திலும், இந்தியா 136 செயல்கள் அனுப்பி 6வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தான் சீனாவின் உதவியால் இடம் பிடிக்க முயல்கிறது.