குவைத்தில் இந்திய தொழிலாளர்களுடன் உரையாடும் போது, ஒரு தொழிலாளர் பிரதமர் மோடியிடம் ஒரு சுவாரசியமான கேள்வி கேட்டார். “சார், நீங்கள் எப்போதாவது மெடிக்கல் லீவ் எடுத்துள்ளீர்களா?” என்பது அவருடைய கேள்வி. இது கேட்டதும் பிரதமர் மோடி சிரித்தபடி பதிலளித்தார், “தொழிலாளர்களின் வியர்வை வாசம் தான் எனக்கு மருந்து” என்று கூறினார்.
குவைத்தில் உள்ள இந்திய தொழிலாளர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பல கேள்விகளுக்கு பதிலளித்தார். இந்த கேள்வி, பிரதமர் மோடியின் கடுமையான உழைப்பையும், விடுமுறை எடுக்காத பணியையும் வெளிப்படுத்தியது. 2014ஆம் ஆண்டு முதல் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, மோடி ஒருநாளும் விடுப்பு எடுக்கவில்லை என்று கடந்த ஆண்டு பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.
இந்த தகவலை தொடர்ந்து, பாஜக அணியும், பிரதமர் மோடி 20 ஆண்டுகளுக்கு ஒருநாள் கூட ஓய்வு எடுக்கவில்லை என்று கூறியுள்ளனர். இதன் பின்னணியில், குவைத்தில் தொழிலாளரின் கேள்வி மற்றும் அதற்கு பிரதமர் மோடி அளித்த பதில் இணையத்தில் வைரலாகி இருக்கின்றது.