மாஸ்கோ: அரசு முறை பயணமாக ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, அந்நாட்டின் உயரிய விருதான ‘ஆர்டர் ஆஃப் செயிண்ட் அப்போஸ்தலர்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். மாஸ்கோவில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
22வது இந்தியா-ரஷ்யா உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அவர், ரஷ்ய அதிபர் புதினுடன் இருதரப்பு விவகாரங்கள் குறித்து விவாதித்தார். இந்நிலையில், பிரதமர் மோடிக்கு ரஷ்ய அரசு சார்பில் ‘ஆர்டர் ஆஃப் செயிண்ட் அப்போஸ்தலர்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இது ரஷ்யாவின் மிக உயரிய விருதாகக் கருதப்படுகிறது. இந்தியா-ரஷ்யா நட்புறவை மேம்படுத்த பிரதமர் மோடி மேற்கொண்ட முயற்சிகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டது. இதை ரஷ்ய அதிபர் புதின் வழங்கினார். இந்த விருது குறித்து பேசிய பிரதமர் மோடி, ‘இது 140 கோடி இந்தியர்களுக்கு கிடைத்த கவுரவம் மற்றும் இரு நாடுகளுக்கு இடையேயான பல நூற்றாண்டுகள் பழமையான நட்புறவின் சின்னம்.
மேலும் அவர் கூறுகையில், “கடந்த 25 ஆண்டுகளில் அதிபர் புதின் தலைமையில் இந்தியா-ரஷ்யா உறவுகள் வலுப்பெற்றுள்ளன. இரு நாட்டு மக்களுக்கும் சிறந்த எதிர்காலத்திற்காக மக்களிடையேயான கூட்டாண்மையை நாம் மேலும் ஊக்குவிக்கவும் ஆதரிக்கவும் வேண்டும். இந்தியா-ரஷ்யா நட்புறவு மிகவும் முக்கியமானது. அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான ஒருங்கிணைந்த முயற்சிகளை நாம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். இந்த திசையில் நாங்கள் தொடர்ந்து பணியாற்றுவோம்,” என்று அவர் கூறினார்.
செயிண்ட் ஆண்ட்ரூ விருது: 1698 ஆம் ஆண்டில் பேரரசர் ஜா பீட்டர் தி கிரேட், இயேசுவின் முதல் அப்போஸ்தலரும் ரஷ்ய துறவியுமான செயிண்ட் ஆண்ட்ரூவின் நினைவாக ‘செயிண்ட் அப்போஸ்தலரின் ஆணையை’ அறிமுகப்படுத்தினார்.
முன்னதாக, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அதிகாரப்பூர்வ பயணமாக நேற்று மாஸ்கோ வந்தடைந்தார். விமான நிலையத்தை அடைந்த அவரை அந்நாட்டின் மூத்த துணைப் பிரதமர் டெனிஸ் மந்துரோவ் வரவேற்றார். பின்னர் நாட்டு மரபுப்படி ராணுவ மரியாதை மற்றும் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.