அமெரிக்காவில் 12 நாடுகளின் குடிமக்களுக்கு நுழையத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு அமெரிக்கா, குறிப்பாக கொலராடோ மாகாணத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு வெளியாகியுள்ளது. அமெரிக்க புலனாய்வு அமைப்பு இப்பிரச்சினையை தீவிரமாக விசாரித்து வருகிறது. அதன்பின், அமெரிக்க அதிபர் டிரம்ப் ஒரு உத்தரவு மூலம் இந்த நாடுகளின் குடிமக்களுக்கு அமெரிக்கா செல்ல தடை விதித்துள்ளார்.

அதாவது, ஆப்கானிஸ்தான், மியான்மர், சாட், காங்கோ, எக்குவடோரியல் கினியா, எரித்திரியா, ஹைட்டி, ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் ஆகிய 12 நாடுகளின் குடிமக்களுக்கு அமெரிக்காவில் நுழைவுத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஏழு நாடுகளின் குடிமக்களுக்கு அமெரிக்கா செல்ல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதான தகவல்களும் வெளியாகி உள்ளன. அந்த நாடுகள் புருண்டி, கியூபா, லாவோஸ், சியரா லியோன், டோகோ, துர்க்மெனிஸ்தான் மற்றும் வெனிசுலா ஆகும்.
வெளிநாட்டினர் அமெரிக்காவில் தீவிரவாத நடவடிக்கைகள் மேற்கொள்ளுவதை அரசு பெரிதும் எதிர்க்கிறது. அதேவேளை, பாதுகாப்பு காரணமாகவே இந்த கட்டுப்பாடுகள் அவசியமானதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்கா தனது மக்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.