அமெரிக்கா: அமெரிக்க அதிபர் ஆன நாள் முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை ட்ரம்ப் எடுத்து வருகிறார் அந்த வகையில் தற்போது சர்வதேச நீதிமன்றத்துக்கே தடை விதித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவின் நெருங்கிய நட்பு நாடான இஸ்ரேல் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை நடத்தி தண்டனை விதித்து வருகிறது.
இந்த சூழலில் ட்ரம்ப்பின் இந்த உத்தரவு சர்வதேச அரங்கில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. ஐநா மனித உரிமை அமைப்பில் இருந்து விலகுவது உட்பட பல்வேறு தடை உத்தரவுகளை பிறப்பித்து வரும் டிரம்ப் மீது மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.