மாஸ்கோ: பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஐநா நாடுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கு ஐ.நா., அமெரிக்க அதிபர் ஜோ பிடன், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இவர்களை தொடர்ந்து இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் கடந்த மாதம் அவர்களுடன் இணைந்தார். இந்நிலையில் ரஷ்ய ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ்.
இந்தியா, பிரேசில் போன்ற நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க பிரதிநிதிகள், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமாக நீண்ட கால அங்கத்துவம் இருக்க வேண்டும். உலகில் பெரும்பான்மையினரின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்துவது அவசியம் என்றார்.