ரியாத்: இந்திய முன்னாள் டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா சமீபத்தில் தனது குடும்பத்தினருடன் ஹஜ் பயணம் மேற்கொண்டார்.
பயணத்தின் புகைப்படங்களை அவரது குடும்பத்தினர் பகிர்ந்து கொண்டனர். இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. இவருக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கும் 2010-ல் திருமணம் செய்து கொண்டனர்.
இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்களுக்கு இஷான் என்ற மகன் உள்ளார். இந்த தகவல் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தற்போது சானியா ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அவரது தந்தை இம்ரான் மிர்சா, சகோதரி அனம் மிர்சா மற்றும் அனம் மிர்சாவின் கணவர் முகமது அசாதுதீன் ஆகியோரும் உடன் சென்றனர். இவர்கள் அனைவரின் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இஸ்லாமியர்கள் புனித ஹஜ்ஜிற்காக சவூதி அரேபியாவில் உள்ள மெக்கா மதீனாவுக்குச் செல்கிறார்கள், இது அவர்களின் வாழ்க்கைக் கடமைகளில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்த ஆண்டு பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஹஜ் பயணம் செய்துள்ளனர். அங்கு சானியா மிர்சாவும் பயணம் செய்துள்ளார். சவுதி அரேபியாவில் கடும் வெப்பம் காரணமாக இந்த ஆண்டு 1,300-க்கும் மேற்பட்ட ஹஜ் யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளனர்.
இதனை சவுதி அரேபியா அரசு சமீபத்தில் உறுதி செய்துள்ளது. இறந்தவர்களில் இந்தியர்களும் அடங்குவர்.