புளோரிடா: அமெரிக்காவின் முன்னாள் அதிபரும், நடப்பு தேர்தலில் குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளருமான டொனால்டு டிரம்பை குறிவைத்து மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இம்முறை ட்ரம்ப் காயமின்றி தப்பித்தாலும், 3 மாதங்களில் இரண்டாவது முறையாக டிரம்பை குறிவைத்து துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது அமெரிக்க அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
என்ன நடந்தது? அமெரிக்க அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் ஞாயிற்றுக்கிழமை மாலை புளோரிடாவில் உள்ள கோல்ஃப் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அவர் விளையாடிக் கொண்டிருந்த பகுதியை நோக்கி 4 ரவுண்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
உடனே டிரம்பின் பாதுகாவலர்கள் துப்பாக்கி குண்டுகள் சத்தம் போட்ட திசையில் சரமாரியாக தாக்கினர். உடனே, அங்கிருந்த மர்ம நபர், தான் கொண்டு வந்த பொருட்களை வைத்து விட்டு, அங்கிருந்து காரில் தப்பிச் சென்றனர்.
டிரம்பின் பாதுகாப்புக்கான ரகசிய சேவை முகவர் கூறுகையில், “டிரம்பை நோக்கி துப்பாக்கியால் சுட்ட நபர் ஏகே 47 துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கியை கொண்டு வந்துள்ளார். மேலும் அவர் விட்டுச்சென்ற பையில் துல்லியமாக தூரம் பார்க்கும் வசதி இருந்தது.
அந்த நபரை நேரில் பார்த்த ஒருவர் எடுத்த புகைப்படம். ஒரு காரில் தப்பிய அந்த நபர் கைது செய்யப்பட்டார், அவர் 58 வயதான ரியான் ரூத் வெஸ்லி என்று அடையாளம் காணப்பட்டார் அவர் கூறினார். அமெரிக்காவின் FBI இந்த சம்பவத்தை ‘கொலை முயற்சி’ வழக்காக பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது.
முன்னதாக, கடந்த ஜூலை மாதம், பென்சில்வேனியாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த டிரம்ப் துப்பாக்கிச் சூடு நடத்தினார். அவரது காதில் காயம் ஏற்பட்டது. அவரது ஆதரவாளர் ஒருவர் கொல்லப்பட்டார். இந்நிலையில் மீண்டும் அவரை குறிவைத்து துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது.
“ஜனாதிபதி ஜோ பிடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஆகியோருக்கு இது குறித்து விளக்கப்பட்டுள்ளது” என்று வெள்ளை மாளிகை தனது X சமூக ஊடக பக்கத்தில் தெரிவித்துள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஜனாதிபதி பிடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளபடி, அமெரிக்காவில் எந்தவிதமான அரசியல் வன்முறைகளுக்கும் இடமில்லை.” டிரம்ப் நலமாக இருப்பது மகிழ்ச்சி.
டிரம்பின் தாக்குதல் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அவரது பாதுகாப்பை உறுதி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.