சூடான்: சூடானில் அகதிகள் முகாம் மீது துணை ராணுவம் நடத்திய தாக்குதலில் 114 பேர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வட ஆப்பிரிக்க நாடான சூடானில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ராணுவத்துக்கும், கிளர்ச்சியாளர்களாக மாறிய பாராளுமன்ற துணை ராணுவப் படையினருக்கும் (RSF) இடையே உள்நாட்டுப் போர் நடந்து வருகிறது.
இந்நிலையில், அந்நாட்டின் தெற்கு டிருப் மாகாணம் எல் பிரெஷ் நகரில் உள்ள அகதிகள் முகாம் மீது துணை ராணுவப்படையினர் நேற்று திடீரென துப்பாக்கிசூடு நடத்தினர். இந்த தாக்குதலில் அகதிகள் முகாமில் வசித்து வந்த பொதுமக்களில் 114 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் 20 குழந்தைகள் மற்றும் 9 சுகாதாரப் பணியாளர்கள் அடங்குவர்.
இந்தத் தாக்குதலால் கிட்டத்தட்ட 2,400 பேர் முகாம்களிலிருந்தும் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஏப்ரல் 2023 இல் உள்நாட்டுப் போர் தொடங்கியதிலிருந்து நடந்த மோதலில் 24,000 க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக ஐ.நா தேரிவித்துள்ளது.