சூடான்: மேற்கு சூடானில் உள்ள டார்பூர் மாகாணம் எல்பேஷர் என்ற இடத்தில் துணை ராணுவ படையினர் திடீர் வான் வழித்தாக்குதலில் ஈடுபட்டனர்.
சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்தினர் இடையே அதிகார போட்டி காரணமாக உள்நாட்டு போர் மூண்டது. இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பசி, பட்டினியால் வாடும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் மேற்கு சூடானில் உள்ள டார்பூர் மாகாணம் எல்பேஷர் என்ற இடத்தில் துணை ராணுவ படையினர் திடீர் வான் வழித்தாக்குதலில் ஈடுபட்டனர். வான்வழியாக சரமாரியாக குண்டுகளை வீசினார்கள்.
இந்த தாக்குதலில் 9 குழந்தைகள் பரிதாபமாக இறந்தனர். 11 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.