ஜூரிச்: சுவிட்சர்லாந்து அரசு, பெண்கள் புர்கா அணிய தடை விதித்து, இந்த தடை வரும் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவித்துள்ளது. முகம் மற்றும் உடலத்தை மறைக்கும் ஹிஜாப் உள்ளிட்ட ஆடை கட்டுப்பாடுகளை மேற்காசிய நாடான ஈரானில் கண்டுவருவது போல சுவிட்சர்லாந்தும் இவ்வுத்தரவை நிறைவேற்றியுள்ளது. முகத்தை முழுமையாக மறைக்கும் புர்கா போன்ற உடைகள் பயன்படுத்தப்படுவதற்கு சுவிட்சர்லாந்து பெடரல் கவுன்சில் 2021ல் நிறைவேற்றிய உத்தரவை அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
தடை அரசாங்க அலுவலகங்கள், வளாகங்கள், விமானங்கள் மற்றும் தூதரகங்களில் அமல்படுத்தப்படாது. ஆயினும், மத ரீதியாக அல்லது காலநிலை காரணமாக அணியக் கூடாது என்று, அந்நாட்டு அரசின் அறிக்கை தெரிவித்துள்ளது.
மசூதிகள் மற்றும் பிற புனித தலங்களில் இந்த உத்தரவு பொருந்தாது. எனினும், உடல்நிலை மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக முகத்தை மறைத்துக்கொள்ள அனுமதி உண்டு.
தடையை மீறுபவர்களுக்கு தண்டனையாக 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும், அதை செலுத்த மறுத்தால் அதிகபட்சமாக 1 லட்சம் ரூபாய் அபராதமாக விதிக்கப்படும்.
இந்த புதிய தடை விதிமுறைக்கு சுவிட்சர்லாந்தில் உள்ள இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளன. அந்நாட்டில் 45 சதவீத முஸ்லிம்கள் வசிக்கின்றனர், பெரும்பாலும் துருக்கி, போஸ்னியா, கொசோவா போன்ற நாடுகளை பூர்வீகமாக கொண்டவர்களே அதிகம்.