புதுடெல்லி: இந்தியாவுக்கு சீனா அமைச்சர் வருகை புரிகிறார். அவரது வருகை எதற்காக என்பதை தற்போது பெரும் பேசும் பொருளாக மாறி உள்ளது.
2020-ல் கால்வான் பகுதியில் சீனாவுடன் ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவத்தினர் 20 பேர் கொல்லப்பட்டதால் எல்லை வழி வர்த்தகம் நிறுத்தப்பட்டது.
எனவே எல்லை வழியாக மீண்டும் வர்த்தகத்தை தொடங்க பேச்சுவார்த்தைகள் நடந்தாலும், அமெரிக்க வரிவிதிப்பை காரணம் காட்டி அரிய வகை கனிமங்களை விநியோகிக்க சீனா யோசிக்கிறது. இதனால் ஆக., 18-ல் இந்தியா வரும் சீன அமைச்சர் வாங் யி இடம் இதுபற்றி ஆலோசனை நடத்த இந்தியா திட்டம் தீட்டி உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியா சீனா இடையே மீண்டும் வர்த்தக உறவு மலருமா என்பது சீன அமைச்சர் வருகைக்கு பின்பு தெரிய வரும் என அரசியல் விமர்சகர்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
ச