இஸ்லாமாபாத்: கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள பஜாயுர் மாவட்டத்தில் உள்ள பாகிஸ்தான் ராணுவத்தின் சோதனைச் சாவடியை கைப்பற்றியதாக தெரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் பல பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அவர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் ஆப்கானிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் பாகிஸ்தானுக்குள் ஊடுருவலை தடுக்க பல்வேறு இடங்களில் சோதனைப் சாவடிகள் அமைத்துள்ளது.
இந்த நிலையில் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள பஜாயுர் மாவட்டத்தில் உள்ள பாகிஸ்தான் ராணுவத்தின் சோதனைச் சாவடியை கைப்பற்றியதாக தெரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும். அந்த இடத்தில் தெரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பின் கொடி ஏற்றப்பட்டுள்ளது. இந்த தகவலை தெரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் அமைப்பு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக மூத்த பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறுகையில் “அந்த சோதனைச் சாவடி குறைக்கும் செயல்முறையில் ஒரு பகுதியாக காலி செய்யப்பட்டது. கொஞ்ச நாட்களுக்கு முன் கைவிடப்பட்டது. அங்கிருந்து ராணுவ வீரர்கள் புதிய கோட்டைக்கு மாற்றப்பட்டனர்.
இந்த செயல்முறை ஜமாயுர் மாவட்டத்துடன் நின்றுவிடவில்லை. வடக்கு மற்றும் தெற்கு வஜிரிஸ்தான் மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.