பிரான்ஸ்: அரசியல் நெருக்கடி காரணமாக பிரான்ஸ் அரசு கவிழ்ந்தது. இதையடுத்து மேக்ரன் பதவி விலக வலியுறுத்தப்பட்டுள்ளது.
பிரான்சில் அரசியல் நெருக்கடி காரணமாக அந்நாட்டு அரசு கவிழ்ந்தது. பிரதமர் பார்னியர் மீது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறியது. இதையடுத்து அதிபர் மேக்ரன் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
சமூகப் பாதுகாப்பு நிதி மசோதாவை சிறப்பு அதிகாரம் மூலம் அதிபர் மேக்ரன் நிறைவேற்ற முயன்றதால் அரசு கவிழ்ந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. நம்பிக்கையில்லா தீர்மானம் மூலம் பிரான்ஸ் அரசு கவிழ்வது 60 ஆண்டுகளில் இதுவே முதன்முறை. 577 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 331 உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவு அளித்துள்ளனர்.