லண்டன்: லண்டனில் இருந்து நெதர்லாந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் வெடித்து சிதறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது
லண்டன் சவுத்எண்ட் விமான நிலையத்தில் இருந்து நெதர்லாந்து புறப்பட்ட (BUSINESS JET) நேற்று மாலை வெடித்து சிதறியது. விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்த பகுதியில் இருந்து எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது. மக்கள் அலறியடித்தபடி அச்சத்துடன் ஓடும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளன.