வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறுகையில், ‘அமெரிக்கா, கனடா இடையேயான உறவு வலுவாக உள்ளது. கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை நண்பர் என்று அழைப்பதில் பெருமிதம் கொள்கிறேன்.’
தனது கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பத்தை தொடர்ந்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தற்போது அவர் தற்காலிக பிரதமராக உள்ளார். சமூக வலைதளத்தில் பைடன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: கடந்த முறை நான் ஒட்டாவா சென்றபோது எதிர்காலம் குறித்து விவாதித்தேன். பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவைப் பற்றியும் இதைச் சொல்லலாம்.
இவரால் அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவு வலுவாக உள்ளது. அவரால் அமெரிக்கா, கனடா நாட்டு மக்கள் பாதுகாப்பாக உள்ளனர். மேலும் அவரால், உலகம் சிறந்த இடம். அவரை எனது நண்பர் என்று அழைப்பதில் பெருமை கொள்கிறேன். மேலும் அவரது கூட்டாண்மை மற்றும் தலைமைத்துவத்திற்கு நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், ‘கனடா அமெரிக்காவுடன் இணைந்தால், வரி விதிக்கப்படாது; வர்த்தக பற்றாக்குறை இருக்காது. கனடா பாதுகாப்பாக இருக்கும்.’ என்று கூறினார்