கிரீஸ் : ஒரே நாளில் நூற்றுக்கணக்கான நிலநடுக்கங்கள் பதிவானதால் கிரீஸ் நாட்டு தீவில் இருந்து சுற்றுலா பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.
கிரீஸ் நாட்டுக்குச் சொந்தமான சான்டோரினி தீவுக்கு அதிகம் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதுண்டு. ஆனால் ஜனவரி மாத இறுதியில் சான்டோரினி தீவில் சரமாரியாக நிலநடுக்கங்கள் ஏற்பட்டது.
ரிக்டரில் 3 ஆக பதிவான நிலநடுக்கங்கள் ஒரே நாளில் நூற்றுக்கணக்கில் பதிவானதால் எரிமலை வெடித்தது. அந்த தீவில் அச்சம் நிலவும் நிலையில் கிரீஸ் நாடு அவசர நிலையை பிரகடனம் செய்து, அங்கிருந்து சுற்றுலா பயணிகள் வெளியேற்றபட்டனர்.
இங்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருவது உண்டு இந்நிலையில் இந்த நிலநடுக்கத்தால் அனைவரும் வெளியேற்றப்பட்டது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் பாதுகாப்பு நடவடிக்கைக்காக இந்த வெளியேற்றும் சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.