அமெரிக்கா மீது தாக்குதல் நடத்த நினைக்கும் எந்த அமைப்பாக இருந்தாலும் கண்டுபிடித்து அழிக்கப்படும் என அதிபர் டொனால்டு டிரம்ப் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார். சோமாலியாவில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கிய குகைகள் மீது அமெரிக்கா வான்வழி தாக்குதல் மேற்கொண்டது.
டிரம்ப் தனது அறிக்கையில், அமெரிக்காவையும் அதன் நட்பு நாடுகளையும் அச்சுறுத்தும் பயங்கரவாதிகளை அழிக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவித்தார். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இந்த தாக்குதல் நடைபெற்றதாகவும், எதிர்காலத்தில் அமெரிக்காவை தாக்க நினைக்கும் எவரும் தப்பிக்க முடியாது எனவும் கூறினார்.
சோமாலியாவின் ஜனாதிபதி ஹசன் ஷேக் முகமது, பயங்கரவாதிகளுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கையை வரவேற்றார். சர்வதேச பயங்கரவாதிகளுக்கு எதிராக தொடர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என அவர் தெரிவித்தார்.