அமெரிக்கா: பிரிக்ஸ் கூட்டமைப்புக்கு எதிராக டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ள பிரிக்ஸ் கூட்டமைப்பு, அமெரிக்க டாலர் மீது நடத்தப்படும் தாக்குதல் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
வாஷிங்டனில் தம்மை சந்தித்த அர்ஜென்டினா அதிபர் ஜாவியர் மில்லேவிடம் பிரிக்ஸில் இணையக் கூடாது என்று வலியுறுத்திய டிரம்ப், பிரிக்சில் எந்த நாடு இணைந்தாலும் அதன் மீது அமெரிக்கா வரி விதிக்கும் என்றார்.
பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள் அமெரிக்காவுடன் விளையாட நினைத்தால், அந்த நாடுகளில் இருந்து அமெரிக்கா வரும் ஒவ்வொரு பொருள்கள் மீதும் கடும் வரி விதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
உலகின் வலுவான கரன்சியாக டாலர் திகழ வேண்டும் என்றும் அது சர்வதேச அளவில் தொடர்ந்து முழுமையாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருப்பதாக தெரிவித்த டிரம்ப், தங்கள் வெளிநாட்டு வர்த்தகத்தில் டாலரைப் பயன்படுத்துவோருக்கு அமெரிக்கா சாதகமாக இருக்கும் என்றார்.