உக்ரைன்: ரஷிய ஹெலிகாப்டரை தாக்கி உக்ரைன் டிரோன் அழித்துள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து 3 ஆண்டுகள் நிறைவடைய இருக்கின்றன. ஆனால் போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. தற்போது டிரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் இரு நாடுகளும் பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உதவியுடன் உக்ரைன் ரஷியா மீது டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தி சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தினால், உக்ரைன் பதிலுக்கு டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்த வகையில் உக்ரைனின் கடல்சார் டிரோன் ரஷியாவின் ஹெலிகாப்டரை வெற்றிகரமாக தாக்கி அழித்துள்ளது. உக்ரைன் டிரோன் ஹெலிகாப்டரை வெற்றிகரமாக தாக்கி அழித்தது இதுவே முதல்முறையாகும்.
2014-ம் ஆண்டு ரஷியா உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை கைப்பற்றியது. இங்கு ரஷியா போர் கப்பல் மற்றும் போருக்கு தேவையான ஆயுதங்கள் போன்றவற்றை சேமித்து வைத்துள்ளது. உக்ரைன் கடல்சார் டிரோன்கள் இவற்றை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. தற்போது முதன்முறையாக ஹெலிகாப்டரைதாக்கி அழைத்து வருகிறது.
ரஷிய ஹெலிகாப்டரின் உரையாடலை இடைமறித்து கேட்டபோது “வெடிச்சத்தம் கேட்டது. ஹெலிகாப்டர் தாக்கப்பட்டுள்ளது. கடல் பகுதியில் இருந்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என விமானி தெரிவிக்கிறார். மேலும் ஒரு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 2-வது நடத்தப்பட்ட தாக்குதலை நான் பார்க்கவில்லை. ஆனால், முதல் தாக்குதல் நேரடியாக தாக்கியது. ஹெலிகாப்டரில் தாக்கப்பட்டதாக உண்கிறேன். சில சிஸ்டம்கள் தோல்வியடைந்துள்ளது. நான் (ஹெலிகாப்டர்) தாக்கப்பட்டேன். கீழ் நோக்கி சென்று கொண்டிருக்கிறேன்” என அவர் பேசுவது பதிவாகியுள்ளது.