உக்ரைன்: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் அமெரிக்க பயணம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் வேண்டுகோளுக்கு இணங்க வரும் திங்கள் கிழமை அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்ள உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் அமைதி நிலவ அனைத்து ஒத்துழைப்பும் செய்ய தயார் எனவும், அமெரிக்கா – ரஷ்யா – உக்ரைன் என முத்தரப்பு அமைதி பேச்சுவார்த்தைக்கு டிரம்ப் சம்மதித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் நேற்று ரஷ்ய அதிபர் புடினை சந்தித்த நிலையில், ஜெலன்ஸ்கியையும் சந்தித்து பேச உள்ளார். இந்த சந்திப்பு உக்ரைன் – ரஷ்யா போர் நிறுத்தத்திற்கு அஸ்திவாரமாக அமையுமா என்று அரசியல் விமர்சகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.