அமெரிக்கா: கூகுள் குரோம் பிரவுசரை விற்பனை செய்ய சொல்ல வேண்டும் என்று அமெரிக்க நீதித்துறை அறிவுறுத்த உள்ளதாக தெரிகிறது.
உலகம் முழுவதும் பலரும் தங்களது செல்போன், கணினி, மடிக்கணினி உள்ளிட்ட சாதனங்களில் பெரிதும் பயன்படுத்துவது கூகுள் குரோம் இன்டர்நெட் பிரவுசரை தான். இந்த நிலையில் கூகுள் பிரவுசரை விற்பனை வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனம் சட்டவிரோதமாக தேடல் சந்தையை குரோம் பிரவுசர் மூலம் ஏகபோகமாக்கியது என கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்க நீதிபதி தீர்ப்பளித்திருந்தார். இந்த நிலையில், அந்த நீதிபதியின் மூலமாகவே கூகுள் குரோம் பிரவுசரை விற்பனை செய்ய சொல்ல வேண்டும் என்று அமெரிக்க நீதித்துறை அறிவுறுத்த உள்ளதாக தெரிகிறது.
இது குறித்து அமெரிக்க நீதித்துறை கருத்து எதுவும் சொல்ல மறுத்துவிட்டது. சட்ட சிக்கல்களை எல்லாம் கடந்து இந்த விவகாரத்தில் தீவிரமான நடவடிக்கையை அரசு தரப்பு மேற்கொள்ள முயல்வதாக கூகுள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதனால் பயனர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.