அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமான சிடிசி (CDC)-யில் 600 ஊழியர்கள் நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்க அரசாங்க பணியாளர் கூட்டமைப்பு (AFGE) தெரிவித்ததன்படி, சிடிசி-யில் பணியாற்றும் 2,000க்கும் மேற்பட்ட உறுப்பினர்களில் தற்போது 600 பேருக்கு நிரந்தர பணிநீக்க அறிவிப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

சுகாதார மற்றும் மனித சேவை துறை, சுகாதார அமைப்புகளை மேம்படுத்தும் நோக்கில் மறுசீரமைப்பு மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் அவசியம் என முன்பே தெரிவித்திருந்தது. ஆனால், பாதிக்கப்பட்டவர்களின் விரிவான விவரங்களை இதுவரை வெளிப்படுத்தவில்லை.
இந்த பணிநீக்க நடவடிக்கை, சமீபத்தில் சிடிசி வளாகத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துடன் நேரடி தொடர்பு கொண்டதாக கருதப்படுகிறது. அச்சம்பவத்தில் ஒரு போலீஸ் அதிகாரி உயிரிழந்தார். அதன் பின்னர் வன்முறைத் தடுப்பு துறையில் பணிபுரிந்த 100 பேரைச் சேர்த்து மொத்தம் 600 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த மாற்றங்கள் சிடிசி-யின் எதிர்கால செயல்திறனை எவ்வாறு பாதிக்கும் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களிடையே அதிருப்தியும், அதேசமயம் நிச்சயமின்மையும் அதிகரித்துள்ளது.