கனடா: ஒருபோதும் அமெரிக்காவின் அங்கமாக இருக்க மாட்டோம் இன்று கனடாவின் புதிய பிரதமர் மார்க் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கனடாவின் புதிய பிரதமராக மார்க் கார்னி பதவியேற்றுக் கொண்டார். அமெரிக்காவுடன் வர்த்தகப் போர் ஏற்பட்டுள்ள நிலையில், அவர் பதவியேற்றுள்ளார். வரும் அக் மாதம் கனடா நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெற உள்ளது.
கனடாவின் பிரதமராக இருந்த ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிர்ப்பு கிளம்பியதால், கூட்டணிக் கட்சி ஆதரவை வாபஸ் பெற்றது. நெருக்கடி ஏற்படவே, பிரதமர் பதவியில் இருந்தும், கட்சித் தலைவர் பதவியில் இருந்தும் ட்ரூடோ விலகினார்.
கனடாவின் புதிய பிரதமரான மார்க் கார்னி, பதவியேற்ற முதல் நாளிலேயே தனது முத்திரையை பதித்துள்ளார். கனடா ஒருபோதும் அமெரிக்காவின் அங்கமாக இருக்காது என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
எனினும், நாட்டின் நலன்களுக்காக டிரம்ப் நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றதும், கனடாவை அமெரிக்காவின் ஒரு அங்கமாக மாற்றுமாறு கேட்டுக் கொண்டார்.