நியூயார்க்: செவ்வாயில் நீர் இருக்கிறதா? இல்லையா என்பது குறித்து நாசா புதிய வீடியோ வெளியிட்டு உள்ளது. அதில் என்ன சொல்லி இருக்காங்க தெரியுங்களா?
செவ்வாய் கிரகம் எப்படி இருக்கும். மணல் மேடுகளாக இருக்குமா? தண்ணீர் இருக்குமா? என பல கேள்விகள் நம்மிடையே எழும். அதற்கெல்லாம் விளக்கம் அளிக்கும் வகையில் நாசாவின் ரோவர் விரிவான வீடியோவை எடுத்து அனுப்பியுள்ளது.
குன்றுகள் நிறைந்திருப்பது போல செவ்வாய் கிரகத்தின் தோற்றம் தெரிகிறது. பகல் நேரத்தில் எடுக்கப்பட்ட இந்த வீடியோவில் 30 கிமீ தூரம் வரை தெரிகிறது. ஆனால், தண்ணீர் மட்டும் தென்படவில்லை.
இதனால் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இல்லையா என்று கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இருக்கிறேன் இது குறித்து ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டேதான் உள்ளன. தற்போது நாசா வெளியிட்டுள்ள இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.