இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 21ம் தேதி நடைபெறும் என இலங்கை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இலங்கை அதிபர் தேர்தல் செப்டம்பர் 21ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பை இலங்கை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. 2019-ம் ஆண்டு இலங்கையில் அதிபர் தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்று அதிபரானார். எனினும் இலங்கையில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி காரணமாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலக கோரி தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதனைத் தொடர்ந்து, 2022ஆம் ஆண்டு ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் பதவி விலகினார்கள்.
பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அதே வருடத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் ரணில் விக்கிரம சிங்கே புதிய ஜனாதிபதியாகவும் குணவர்தன பிரதமராகவும் பதவியேற்றனர்.
இலங்கையில் தற்போதைய அதிபரின் பதவிக்காலம் வரும் நவம்பர் 17ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில், இலங்கை அதிபர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, செப்டம்பர் 21ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இலங்கை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்கே மீண்டும் போட்டியிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இலங்கையின் முன்னாள் ராணுவ தளபதி சார்த் பொன்சேகா அதிபர் தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “இலங்கையில் கடந்த 76 ஆண்டுகளாக ஆட்சி செய்த ஊழல் கட்சிகள் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன. ஊழலை ஒழிக்க வேண்டும்.இதனால்தான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.