நியூயார்க்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வாங்கிய புது டெஸ்லா கார் தான் இப்போது அந்நாட்டில் அனைத்து மக்களும் பேசும் பொருளாக மாறி உள்ளது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புதிதாக வாங்கிய டெஸ்லா காரின் புகைப்படத்தை வெள்ளை மாளிகை பகிர்ந்துள்ளது.
வெள்ளை மாளிகைக்கு வெளியே, ட்ரம்புக்காக டெஸ்லாவின் சிறந்த மாடல் கார்களை எலான் மஸ்க் காண்பித்துள்ளார். அதில் சிவப்பு நிற டெஸ்லா x மாடல் காரை ட்ரம்ப் தேர்வு செய்தார்.
குண்டு துளைக்காத அந்த காரை ட்ரம்ப் ஓட்ட, மஸ்க் அருகே அமர்ந்து சிறப்பம்சங்களை விளக்கினார். தேர்தல் நேரத்தில் டிரம்ப்பிற்கு எலான் மஸ்க் ஆதரவு அளித்ததால்அவருக்கு அரசு துறையில் உயர்ந்த பதவியை அதிபர் டிரம்ப் அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.