இஸ்லாமாபாத்: இந்தியாவுடன் மோதல் அதிகரிக்கும் அபாயம் காரணமாக, பாகிஸ்தான் பங்குச் சந்தை 3,500 புள்ளிகளுக்கு சரிவை சந்தித்தது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த ஏப்.22ல் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள், சுற்றுலாப்பயணிகள் மீது தாக்குதல் நடத்தினர். அதற்கு தக்க பதிலடி தருவதற்கு இந்தியா தயாராகி வருகிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் தகவல் அமைச்சர் அட்டா தரார், இந்தியா 24 முதல் 36 மணி நேரத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக ராணுவ நடவடிக்கை எடுக்கத் திட்டமிட்டுள்ளது என்று கூறியிருந்தார்.
இந்த நிலை காரணமாக பாகிஸ்தான் பங்குச்சந்தை பெரும் சரிவை எதிர்கொண்டது. பாகிஸ்தான் பங்குசந்தை புள்ளி விபரங்களின் படி,பி.எஸ்.எக்ஸ் 3,500 புள்ளிகளுக்கு மேல் சரிந்தது.