தேவையான பொருட்கள்:
வெங்காயம் – 3
உப்பு – 1 டீஸ்பூன்
இஞ்சி – 2 இன்ச் (துருவியது)
பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை – சிறிது (பொடியாக நறுக்கியது)
சோம்பு தூள் – 1 டீஸ்பூன்
கடலை மாவு – 4 டேபிள் ஸ்பூன்
மைதா மாவு – 4 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
முதலில் வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக் கொள்ள வேண்டும். பின் ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயத்தை எடுத்து, அதில் உப்பு, பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து, 10 நிமிடம் மூடி வைக்க வேண்டும். பின்பு அதில் பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, சோம்பு தூள், கடலை மாவு, மைதா மாவு சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து விட வேண்டும்.
முக்கியமாக இப்படி பிசையும் போது நீர் எதுவும் சேர்க்க வேண்டாம். ஒருவேளை அதிக நீராக இருப்பதை உணர்ந்தால், அத்துடன் சிறிது மைதா மற்றும் கடலை மாவை சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள். இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்து வைத்துள்ளதை சிறிது எடுத்து உருட்டி, லேசாக தட்டி எண்ணெயில் போட்டு மிதமான தீயில் வைத்து, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான டீக்கரை வெங்காய வடை தயார்.