By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
Vivegamnews
  • Home
  • உலகம்
    உலகம்Show More
    உலகளாவிய ராணுவ செலவினம் 2887 பில்லியன் டாலரை எட்டியது
    1 Min Read
    110 கிலோ கஞ்சா கடத்தி வந்த 22 பௌத்த துறவிகள் கைது
    2 Min Read
    சிக்கன் கேம் போல் தான் அமையும்… கடல் வழி திறப்பு குறித்து கருத்து
    2 Min Read
    மெட்டா நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு… என்ன தெரியுங்களா?
    1 Min Read
    அதிபர் டிரம்ப் நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் பற்றி வெளியான தகவல்
    1 Min Read
  • இந்தியா
    இந்தியாShow More
    மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து புதுச்சேரி கலெக்டர் தகவல்
    2 Min Read
    தேர்தலுக்கு பின் பெட்ரோல், டீசல் விலை உயர்வா? மத்திய அரசு விளக்கம்
    3 Min Read
    பானிபூரி சாப்பிட்ட சிறுவன் உயிரிழப்பால் பரபரப்பு
    1 Min Read
    மிக சிறந்த மருத்துவ மூலிகை முடக்கத்தானால் ஏற்படும் நன்மைகள்
    2 Min Read
    மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் கைது
    1 Min Read
  • தமிழகம்
    தமிழகம்Show More
    அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய தர்பூசணி அளிக்கும் நன்மை
    1 Min Read
    ரம்பூட்டான் பழத்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்
    1 Min Read
    புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பொட்டுக்கடலையால் கிடைக்கும் நன்மைகள்
    1 Min Read
    அமோகமான மருத்துவக் குணங்கள் நிறைந்த மஞ்சள்
    1 Min Read
    நன்றாக தூங்குவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.. அதற்கான சிறந்த உணவுகள் விபரம்!!!
    1 Min Read
  • மற்ற செய்திகள்
Reading: தென்மேற்கு பருவமழையால் கோவை, நீலகிரி, தேனியில் கனமழை
Sign In
Payment
VivegamnewsVivegamnews
Font ResizerAa
  • இன்றைய செய்திகள்
  • இந்தியா
  • தமிழகம்
Search
  • Home
  • உலகம்
  • இந்தியா
  • தமிழகம்
  • மற்ற செய்திகள்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • இன்றைய
    • ஈழத்தமிழ்
    • சமூகப்பார்வை
    • சமையல் குறிப்புகள்
    • சிறப்புப்பகுதி
    • சினிமா
    • சுற்றுலா
    • தினம் ஒரு குறள்
    • தொழில்நுட்பம்
    • மகளிர்
    • மருத்துவ குறிப்புகள்
    • வர்த்தகம்
    • விவசாயம்
    • விளையாட்டு
  • PAYMENT
Have an existing account? Sign In
Follow US
© Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
Vivegamnews > Blog > தமிழகம் > தென்மேற்கு பருவமழையால் கோவை, நீலகிரி, தேனியில் கனமழை
தமிழகம்

தென்மேற்கு பருவமழையால் கோவை, நீலகிரி, தேனியில் கனமழை

Nagaraj
Last updated: May 25, 2025 2:40 pm
By Nagaraj 2 Min Read
Share
SHARE

கோவை: தென்மேற்கு பருவமழையால் கோவை, நீலகிரி,தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலையில் சிறுவாணி நீர்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருகிறது.

தென்மேற்கு பருவமழை கேரளாவில் வழக்கமாக ஜூன் 1-ந்தேதி தொடங்கும் நிலையில், இந்த ஆண்டு 8 நாட்களுக்கு முன்கூட்டியே தொடங்கி இருப்பதாகவும், இதற்கு முன்பு 2009-ம் ஆண்டு மே மாதம் 23-ந்தேதி தென் மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியதாகவும், அந்த வகையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பருவமழை முந்தியிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் அமுதா தெரிவித்தார்.

மேலும், தெற்கு கொங்கன் கடலோர பகுதிகளில் இருந்து மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் உருவாகிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, கிழக்கு திசையில் நகர்ந்து, தாழ்வு மண்டலமாக ரத்தனகிரி-தாபோலுக்கு இடையே கரையை கடந்தது. இதுதவிர மத்திய மேற்கு மற்றும் அதனையொட்டிய வடக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை மறுதினம் (செவ்வாய்க்கிழமை) உருவாக வாய்ப்பு இருக்கிறது.

இந்த காரணங்களினால், இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு கனமழை முதல் அதி கனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுவதால், அந்த மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி, கன்னியாகுமரி,ராமநாதபுரம், மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்பதால் அங்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், திருப்பூர், திண்டுக்கலில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், கூடலூர் ஓவேலி வனச்சரகத்தில் யானை விரட்டும் காவலராக பணியாற்றி வருகிறார் ராஜேஷ். இவர் விடுமுறை பெற்று கேரளா மஞ்சேரியை நண்பர்கள் ஆண்டோதாமஸ், 53, அருண் தாமஸ், 44, ஆகியோருடன், ஓவேலி அண்ணா நகர் – தருமகிரி சாலை வழியாக கூடலூர் நோக்கி காரில் சென்றுகொண்டு இருந்தார்.

செல்லும் வழியில் ஆற்றைக் கடக்க முயன்ற போது, கார் வெள்ளத்தில் சிக்கியது. மூவரும் தப்பிக்க வழியின்றி, காரின் மீது ஏறி நின்று சத்தமிட்டனர். கூடலூர் நிலைய தீயணைப்பு வீரர்கள், நள்ளிரவு 1:00 மணிக்கு, அப்பகுதிக்கு சென்று, போராடி அதிகாலை 3:30 மணிக்கு மூவரையும் உயிருடன் மீட்டனர்.

கேரளாவில் பருவமழை துவங்கிய நிலையில், கன்னியாகுமரி மாவட்டத்திலும் அதன் தாக்கம் தெரிகிறது. இரண்டு நாட்களாக பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது. இரணியல் அருகே கண்டன்விளையில் காற்றின் வேகத்தில், 150 அடி உயர மொபைல் போன் கோபுரம் சரிந்து, ராஜமல்லி என்பவரது வீட்டின் மீது விழுந்தது.வீடு கடுமையாக சேதமடைந்தது.

குலசேகரம் அருகே அண்டூர் சரக்கல்விளை பகுதியில், காற்றில் அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்த ஹோட்டல் தொழிலாளி கிருஷ்ணன், 75, உயிரிழந்தார். ஆற்றுார் ஆனைக்குழி பகுதியில் செல்லையன் 92, என்பவரது வீட்டில் மரம் விழுந்ததில் கூரை சேதமடைந்து செல்லையன் பலத்த காயமடைந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

You Might Also Like

அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிரம்பிய தர்பூசணி அளிக்கும் நன்மை

ரம்பூட்டான் பழத்தால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த பொட்டுக்கடலையால் கிடைக்கும் நன்மைகள்

அமோகமான மருத்துவக் குணங்கள் நிறைந்த மஞ்சள்

நன்றாக தூங்குவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.. அதற்கான சிறந்த உணவுகள் விபரம்!!!

TAGGED:damagedHeavy Rainhouse damageKanyakumariMonsoonRoof damageகனமழைகன்னியாகுமரிகூரை சேதம்சேதமடைந்ததுபருவமழைவீடு சேதம்
Share This Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Telegram Email Copy Link Print
Leave a comment

Leave a Reply Cancel reply

You must be logged in to post a comment.

- Advertisement -

More Popular from Foxiz

சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

By admin 1 Min Read

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

By admin
சினிமா

சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 11வது நிகழ்ச்சி நடுவர்கள் பாடகி சித்ரா, இமான்

By Nagaraj 1 Min Read
- Advertisement -
Ad image
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படத்தை பார்த்து மனம் நெகிழ்ந்து பாராட்டிய முதல்வர் ஸ்டாலின்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்கும் 'அமரன்' திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மேஜர் முகுந்த் வரதராஜனின்…

By admin
சினிமா

அமரன் திரைப்படம் வசுல் நிலவரம்

சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி ஆகியோர் இணைந்து நடித்து, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள 'அமரன்' திரைப்படம் இன்று வெளியானது. இலங்கையில்…

By admin
சினிமா

‘மேஜர் முகுந்த்’பற்றிய படம் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் கொண்டாடும் திரைப்படம்

ராணுவத்தில் உயிர் தியாகம் செய்த தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன், தனது சாகசங்கள் மற்றும் அர்ப்பணிப்புக்காக அனைவரின் மனதிலும் நிலைத்திருக்கிறார்.…

By admin
சினிமா

விஜய்க்கு ரஜினிகாந்தின் வாழ்த்து: விக்கிரவாண்டியில் வெற்றி பெற்ற தவெக முதல் மாநாடு

விக்கிரவாண்டியில் நடைபெற்ற முதல் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) மாநாட்டில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்க்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்த்து…

By admin
Vivegamnews

Wisdom, No. 1 Online Tamil Newspaper. Top sports, employment, cinema, business, education, spiritual news instantly.

Categories

  • Today’s News
  • Daily Kural
  • Trading News

Quick Links

  • Advertise with us
  • Newsletters
  • Complaint
  • Deal

© 2020 vivegamnews Infotainment.  All Rights Reserved. Developed by Dhayanandh R

Welcome Back!

Sign in to your account

Lost your password?