சில நாட்களுக்கு முன் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மோதிக் கொண்ட வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கை விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ளது.
எழும்பூர் நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை வழக்கை வேறு வழக்கறிஞருக்கு மாற்றும் பேச்சுவார்த்தை நடந்தபோது இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது.
நாற்காலிகளை வீசி ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இந்த சம்பவத்தின் அடிப்படையில் இரு தரப்பினரும் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உயர்நீதிமன்றம் தானாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மேல்முறையீடு செய்தார்.
மேல்முறையீட்டை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கறிஞர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்த முன்வருவதாக ஒப்புக்கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.