தேவையான பொருட்கள் :
மீன் – 300 கிராம்.
உருளைக்கிழங்கு – 2.
பிரட் – 2.
மீடியம் சைஸ் வெங்காயம் – 1.
பச்சை மிளகாய் – 2.
கொத்தமல்லி – 1 கொத்து.
எலுமிச்சை பழம் – 1.
மிளகு பொடி, உப்பு – தேவையான அளவு.
செய்முறை :
முதலில், ரெசிபி செய்ய எடுத்துக்கொண்ட மீனை மஞ்சள் மற்றும் கல் உப்பு சேர்த்து நன்றாக சுத்தம் செய்து, எலும்பு நீக்கி முடிந்த அளவு பொடியாக நறுக்கி வைக்கவும்.
இதை தொடர்ந்து வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றையும் பொடியாக நறுக்கி தனியே எடுத்து வைக்கவும். அதே சமயம் எடுத்து வைத்துள்ள பிரட் துண்டுகளை ஒரு மிக்சி ஜாரில் போட்டு பொடியாக அரைத்து வைக்கவும்.
இதனிடையே ஒரு பாத்திரத்தில் உருளைக்கிழங்கு மற்றும் தண்ணீர் சேர்த்து அவித்து, தோல் நீக்கி பின்னர் மசித்து தனியே எடுத்து வைக்கவும். தற்போது அகன்ற பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் நறுக்கிய மீன், வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, உருளைக்கிழங்கு, உப்பு, மிளகு, பிரட் பொடி சேர்த்து நன்கு பிசைந்துக் கொள்ளவும். இறுதியாக எலுமிச்சை பழத்தையும் இரண்டாக நறுக்கி, சாறு புழிந்து இதனுடன் சேர்த்து பிசைந்து அந்த பாத்திரத்தை 15 நிமிடதிதற்கு மூடி அப்படியே ஊற வைக்கவும்.
இதற்கிடையில், கேக் தயார் செய்ய ஓவனை 200° வெப்பநிலையில் 10 நிமிடத்திற்கு Preheat செய்து ஓவனை தயார் நிலையில் வைக்கவும். 15 நிமிடம் நன்கு ஊறிய மீன் கேக் சேர்மத்தை ஒரு பேக்கிங் ட்ரேவில் வேண்டிய அளவு மற்றும் வடிவில் பிடித்து வைத்து 200° C வெப்பநிலையில் 15 நிமிடத்திற்கு பேக் செய்து எடுக்க சுவையான மீன் கேக் தயார்.