ஆரோக்கியமான வாழ்க்கை வாழ்வதற்கு ஆரோக்கியமான இரத்தத்தை பராமரிப்பது முக்கியம். அதற்கு நாம் உண்ணும் உணவு மற்றும் வாழ்க்கை முறை மிகவும் முக்கியமானது. ஆரோக்கியமான சருமத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு ரத்தம் தூய்மையாக இருக்க வேண்டியது அவசியம். இரத்தத்தில் உள்ள அசுத்தங்கள் காரணமாக முகப்பருக்கள், கொப்பளங்கள், தடிப்புகள் தோன்றலாம்.
மேலும் தூய்மையற்ற ரத்தம் ஒவ்வாமை, குமட்டல் மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்தும். உடல் உறுப்புகளுக்கு ஆக்சிஜனை தடையின்றியும், சீராகவும் கொண்டு செல்வதற்கு இரத்த சுத்திகரிப்பு முக்கியமானது. சில வகை உணவு பொருட்களை கொண்டு இயற்கையான முறையில் ரத்தத்தை சுத்திகரிப்பது பற்றி பார்ப்போம். ஹைதராபாத்தில் உள்ள பஞ்சார் ஹில்ஸ் கேர் மருத்துவமனையின் மருத்துவ உணவியல் நிபுணரான ஜி சுஷ்மா, இரத்த சுத்திகரிப்புக்கு உங்கள் உணவில் சேர்க்க வேண்டிய ஐந்து ஆற்றல்மிக்க உணவுகளை பற்றி பகிர்ந்து கொள்கிறார்.
இரத்தத்தை சுத்திகரிப்பு செய்ய இந்த சூப்பர்ஃபுட்களை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்வது முக்கியமாகும். கீரைகளின் நன்மைகள்: கீரை, முட்டைக்கோஸ் மற்றும் சுவிஸ் சார்ட் ஆகியவை இரும்புச்சத்து நிறைந்த உணவுகளாகும். இரத்த சிவப்பணு உற்பத்திக்கு இரும்புச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், இது இரத்த சோகையைத் தடுக்க உதவுகிறது என்று சுஷ்மா கூறியுள்ளார். கீரைகளில் வைட்டமின் கே உள்ளதால் வலுவான எலும்புகளை பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இரும்புச்சத்து குறைபாடு இரத்த சோகைக்கு ஒரு பொதுவான காரணமாகும், இதை சமாளிக்க அதிக இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் சாப்பிட வேண்டும்.
இந்த ஊட்டச்சத்து இரத்த சிவப்பணுக்களில் காணப்படும் ஹீமோகுளோபின் என்ற ப்ரோட்டீனின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது, மேலும், இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்கிறது. பெர்ரிகளின் நன்மைகள்: ப்ளூபெர்ரிகள், ஸ்ட்ராபெர்ரிகள் மற்றும் ராஸ்பெர்ரிகள் ஆகிய பெர்ரிகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தவை. இந்த பெர்ரிகளில் இயர்கையாகவே இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் பண்புகள் நிரம்பியுள்ளது. இவை இரத்த அழுத்தத்தைக் குறைக்கின்றன மற்றும் உங்கள் கொழுப்பைக் கட்டுக்குள் வைத்திருக்கின்றன என்றும் சுஷ்மா கூறியுள்ளார். இந்த பெர்ரிகளில் வைட்டமின் சி நிரம்பியுள்ளதால், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றன மற்றும் இரும்பு உறிஞ்சுதலை மேம்படுத்துகின்றன.
மீன்கள்: சால்மன், கானாங்கெளுத்தி மற்றும் மத்தி மீன் ஆகியவை இதய ஆரோக்கியம் நிறைந்த மீன்களாகும். ஒமேகா-3 ஃபாட்டி ஆசிட்கள் நிறைந்த இந்த மீன்களானது, வீக்கம், ட்ரைகிளிசரைடுகள் (தீங்கு விளைவிக்கும் கொழுப்புகள்) மற்றும் இதய நோய் அபாயம் ஆகியவற்றை குறைக்கின்றன. நட்ஸ் மற்றும் விதைகள்: பாதாம், சியா விதைகள் மற்றும் ஆளிவிதைகள் ஆகியவற்றில் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் ஹெல்தி ஃபாட்ஸ், ஃபைபர் மற்றும் ப்ரோட்டீன் ஆகியவற்றால் நிரம்பியுள்ளன,
இவை அனைத்தும் ஃபாட்ஸ் மற்றும் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகின்றன. பீட்ரூட்: பீட்ரூட் ஆனது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. பீட்ரூட், இரும்பு மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட்களின் கலவையானது, இரத்தத்தில் ஆக்ஸிஜன் அதிகரிப்பதை மேம்படுத்துவதற்கும் சுத்திகரிப்பதற்கும் உதவுகிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்க செய்வதற்கு பீட்ரூட் பரிந்துரைக்கப்படுகிறது. அதில் இருக்கும் ஆன்டிஆக்சிடென்டுகள் மற்றும் நைட்ரேட்டுகள் ரத்தத்தை சுத்திகரிக்கும் என்சைம்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவும். மேலும், கல்லீரலின் செயல்பாடுகளையும் அதிகரிக்க செய்யும்.