வழக்கமான டீ, காஃபிக்குப் பதிலாக கிரீன் டீயை தினமும் இரு வாரங்களுக்கு தொடர்ந்து குடிப்பதன் மூலம், உடலில் பல வகையான நேர்மறையான மாற்றங்களை காண முடியும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். கிரீன் டீ என்பது பல வகையான மருத்துவ நன்மைகளை கொண்ட ஒரு சக்திவாய்ந்த பானமாகும். இரண்டு வாரங்களுக்குள் அதன் பலன்கள் தெளிவாக தெரியும்.

கிரீன் டீ குடிப்பதன் மூலம் குடல் பாக்டீரியாக்கள், குறிப்பாக பிஃபிடோபாக்டீரியா போன்ற நன்மை பயக்கும் மைக்ரோஆர்கனிசங்களை அதிகரிக்க முடியும். செரிமான அமைப்பை இது மேம்படுத்துகிறது. அதே நேரத்தில் கல்லீரல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. கிரீன் டீயில் காணப்படும் கேடசின்கள் கல்லீரலின் கொழுப்பைக் குறைத்து அதன் செயல்பாட்டை மேம்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
இதய நலம், நினைவாற்றல், ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் கட்டுப்பாடு போன்ற அம்சங்களிலும் கிரீன் டீ பலனளிக்கிறது. தொடர்ந்து கிரீன் டீ குடிக்கும் போது டிமென்ஷியா ஏற்படக் கூடிய அபாயம் குறைவாகும். மேலும் கிரீன் டீ ரத்த சர்க்கரையையும் இன்ஃளமேஷனைவும் குறைத்து Leaky gut பிரச்சனையிலிருந்து விடுவிக்கக்கூடியது.
கிரீன் டீ உடல் எடையை குறைக்கும் ஒரு முக்கிய காரணியாகவும் விளங்குகிறது. இதனை தொடர்ந்து குடிப்பவர்கள் பிஎம்ஐயிலும் (BMI) மாற்றம் காணக்கூடும். இதனை உங்கள் டயட்டில் சேர்க்கும்போது, புதினா அல்லது மல்லிகை போன்ற சுவைகள் சேர்த்து சுவையை மாற்றலாம். காஃபியைவிட குறைந்த அளவிலான காஃபின் கொண்டிருப்பதால் இது பாதுகாப்பானதாகவும் உள்ளது.