புதுடெல்லி: இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்றுவதற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வழங்கியுள்ளதாக இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பின் (பிக்கி) தலைவர் அனிஷ் ஷா பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “2024-25-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் பிக்கி மற்றும் தொழில்துறையின் அனைத்து எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது.
மேக்-இன்-இந்தியா, பெண்கள் தலைமையிலான மேம்பாடு, வேளாண்மை செழிப்பு மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றை சுற்றி இந்த பட்ஜெட் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த அளவில் இந்த பட்ஜெட், வளர்ச்சி சார்ந்த ஒன்றாக உள்ளது என்பதுடன் இந்தியாவை உற்பத்தி மையமாக வார்த்தெடுப்பதிலும் அதிக கவனம் செலுத்துவதாக அமைந்துள்ளது” என்றார்.