பேஜிங் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) பாதுகாப்பு அமைச்சர்களின் கூட்டத்தில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பற்றி எந்தவித குறிப்பும் இல்லாததையடுத்து, இந்தியா கூட்டறிக்கையில் கையெழுத்திட மறுத்துள்ளது. இதன் மூலம், பயங்கரவாதத்திற்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டில் இந்தியா நின்றுள்ளதாகும், பாதுகாப்பு மற்றும் அரசியல் ஒத்துழைப்பில் விருப்பமில்லை என சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு இந்தியா தன்னிச்சையாகவும் உறுதியாகவும் செய்திகள் அனுப்பியுள்ளது.

சீனாவின் கிங்டாவோ நகரில் நடைபெற்ற கூட்டத்தில், பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் பங்கேற்ற நிலையில், இந்தியா சார்பில் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டிருந்தார். ஏப்ரல் மாதம் ஜம்மு-காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ‘தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட்’ என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்தியா இந்த தாக்குதலை கூட்டறிக்கையில் சேர்க்க வேண்டுமென்று கோரியது.
ஆனால் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அதை தவிர்த்தன. அதே சமயம், பாகிஸ்தான் குற்றம்சாட்டும் வகையில் பலுசிஸ்தானில் நடக்கும் நிகழ்வுகள் பற்றி அறிக்கையில் இடம்பெற்றிருந்தது. இதனை இந்தியா எதிர்த்து, அறிக்கையில் கையெழுத்திட மறுத்தது.
இந்த நடவடிக்கையின் மூலம், பயங்கரவாதத்திற்கு ‘பூஜ்ஜிய சகிப்புத்தன்மை’ என்ற கொள்கையை நிலைநாட்டும் இந்தியா, பாதுகாப்பு மற்றும் சர்வதேச நலன்களில் தனது நிலைப்பாட்டை வலியுறுத்தியுள்ளது. ராஜ்நாத் சிங், “பயங்கரவாத ஆதரவாளர்கள் அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும்” எனக்கூறியும் இதை உறுதிப்படுத்தினார்.