தேவையான பொருட்கள்:
வறுத்து அரைப்பதற்கு…
சீரகம் – 1 டீஸ்பூன்
கிராம்பு – 4
பட்டை – 2 துண்டு
அன்னாசிப்பூ – 1
கசகசா – 1 டீஸ்பூன்
மிளகு – 1 டீஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
மல்லி – 2 டீஸ்பூன்
எண்ணெய் – 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 20
புதினா இலைகள் – 4
துருவிய தேங்காய் – 1/2 கப்
பூண்டு – 10 பல்
இஞ்சி – 4 சிறிய துண்டு
தண்ணீர் – தேவையான அளவு
கிரேவிக்கு…
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
சோம்பு – 1 டீஸ்பூன்
பட்டை – 2
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை – 1 கொத்து
தக்காளி – 2 (பொடியாக நறுக்கியது)
குழம்பு மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
பச்சை பட்டாணி – 1/4 கிலோ
உப்பு – சுவைக்கேற்ப
தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை : முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், கிராம்பு, பட்டை, அன்னாசிப்பூ, கசகசா, மிளகு, சோம்பு, மல்லி ஆகியவற்றை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சின்ன வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும். பின்பு அதில் புதினா இலைகள், துருவிய தேங்காய், பூண்டு, இஞ்சி சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த மற்றும் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, பட்டை சேர்த்து தாளிக்க வேண்டும். பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். அடுத்து அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும். பின்பு அதில் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து 1 நிமிடம் கிளறி, பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, அதோடு பச்சை பட்டாணியையும் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கினால், சுவையான பச்சை பட்டாணி கிரேவி தயார்.