புதுடில்லி: குளறுபடியின்றி நீட் தேர்வு நடத்தப்படும் என்று நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி அளித்துள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.
எதிர்காலத்தில் குளறுபடியின்றி வெளிப்படையான நீட் தேர்வு முறையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதியளித்துள்ளது.
நீட் தேர்வு தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பையடுத்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், கல்வி உயர்கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் எந்த விதக் குளறுபடியையும் சகித்துக் கொள்ள முடியாது என்றார்.
அரசின் கொள்கையை உச்சநீதிமன்றத்திடம் தெளிவுற விளக்கியிருப்பதாகவும் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.