தமிழகம் முழுவதும் உள்ள 18 கிளை சிறைகளை மூட ஏடிஜிபி உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும் 9 மத்திய சிறைகள், 5 பெண்கள் சிறைகள், 14 மாவட்ட சிறைகள், 106 கிளைச் சிறைகள் குற்றவாளிகள் மற்றும் விசாரணைக் கைதிகளை அடைக்க உள்ளன.
இதில் பல சிறைகள் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டவை. இவற்றில் சில உடைந்து பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. இத்தகைய பாழடைந்த மற்றும் போதிய வசதிகள் இல்லாத சிறைகளை மூட உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது.
இதன் அடிப்படையில் தமிழகத்தில் மதுராந்தகம், திருத்தணி, ஆரணி, போளூர், செய்யாறு, கீரனூர், மேட்டுப்பாளையம், ராசிபுரம், கடலூர், பரமத்தி வேலூர், மணப்பாறை, முசிறி, திருமயம், பட்டுக்கோட்டை உள்ளிட்ட 18 கிளைச் சிறைகளை மூடிவிட்டு, கைதிகளை மாவட்ட சிறைகளுக்கு மாற்ற வேண்டும் என ஏடிஜிபி மகேஸ்வர் தயாள் உத்தரவிட்டுள்ளார். இந்த பாழடைந்த சிறைகளை இடித்துவிட்டு புதிய கிளை சிறைகள் கட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.