அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள டெம்பே பகுதியில் நடந்த ஒரு சம்பவம், சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஒரு உணவு நிறுவனத்தில் பணியாற்றும் டெலிவரி ஊழியர், வாடிக்கையாளருக்கான பீட்சாவை கொண்டு சென்று கொண்டிருந்தபோது, போக்குவரத்து விதிமீறலுக்காக போலீசாரால் கைது செய்யப்பட்டார். தன்னுடைய கடமையை நிறைவேற்ற முடியாத சூழ்நிலையில் அவர் இருந்தபோதும், அவரது வேலை பாதிக்கப்படாமல் செய்வது குறித்து போலீசார் சிந்தித்தனர்.

விநியோகிக்கப்பட வேண்டிய பீட்சா கைவிடப்பட்டிருந்ததை கண்டு, பொறுப்புடன் நடந்துகொண்ட போலீசார், அந்த பீட்சாவை தாங்களே எடுத்துச் சென்று, வாடிக்கையாளரிடம் நேரில் வழங்கினர். கைதான ஊழியரின் மொபைல் செயலியில் பதிவான முகவரியை வைத்து, அந்த குடியிருப்புக்குச் சென்று உணவை நேராக வழங்கியுள்ளனர். இந்த செயல் வாடிக்கையாளருக்கும் ஒரு Pleasant surprise-ஆக அமைந்தது. உணவு வாங்கிய பெண் வாடிக்கையாளர், போலீசாரை பார்த்ததும் திகைத்து வியந்தும் மகிழ்ந்தும் இருந்தார்.
இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள், டெம்பே போலீசாரின் சமூக வலைதள பக்கத்தில் பகிரப்பட்டது. அதன் மூலம் அவர்கள், “பாதுகாப்போ அல்லது பீட்சா டெலிவரியோ நகரத்துக்கு 24 மணி நேரமும் நாங்கள் காத்திருக்கிறோம்” என உணர்ச்சிபூர்வமாகக் குறிப்பிட்டனர். சமூக பொறுப்புடன் செயல்பட Police force எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
இந்தச் சம்பவம் மக்கள் மனதில் போலீசாரின் மனிதநேயப் பிம்பத்தை உயர்த்தியுள்ளது. அவர்கள் பாதுகாப்பிற்கும் சேவைக்கும் சமமான முக்கியத்துவம் அளிப்பது இப்போது உலக அளவில் பாராட்டப்படுகிறது.