சென்னை: நீட் தேர்வு மற்றும் நிதி ஆயோக் கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் புறக்கணித்தார். இது ஜனநாயகத்தின் முழுமையான தோல்வி’ என மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறினார்.
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தை காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி முதல்வர்கள் புறக்கணித்துள்ளனர். இது குறித்து எல்.முருகன் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது: நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்களுக்கு துரோகம் செய்து விட்டார். தோல்வியை ஒப்புக்கொண்டார்.
ஸ்டாலின் குழப்பத்தில் உள்ளார்
ஸ்டாலின் தமிழக மக்களுக்கு எப்போதும் தவறான தகவல்களை அளித்து வருகிறார். அவர் எப்போதும் குழப்பத்தில் இருக்கிறார். நீட் தேர்வு மற்றும் நிதி ஆயோக் கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் புறக்கணித்தார். இது ஜனநாயகத்தின் முழுமையான தோல்வியாகும். இவ்வாறு எல்.முருகன் கூறினார்.