பாஜக அரசு 3-வது முறையாக ஆட்சி அமைத்துள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் ஆளுநர் பதவிகள் காலியாக இருந்த நிலையில் புதிய ஆளுநர்களை மத்திய அரசு நியமித்துள்ளது.
மத்தியில் பாஜக தலைமையிலான அரசு மூன்றாவது முறையாக பதவியேற்று நாடு முழுவதும் காலியாக உள்ள ஆளுநர் பதவிகளை நிரப்பியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை ஜனாதிபதி திரவுபதி முர்மு வெளியிட்டுள்ளார்.
அதன் படி,
மகாராஷ்டிரா – சிபி ராதாகிருஷ்ணன்
புதுச்சேரி – கே.கைலாசநாதன், ஓய்வு பெற்ற முன்னாள் ஐ.ஏ.எஸ்
தெலுங்கானா – ஜிஷ்ணு தேவ் சர்மா
ராஜஸ்தான் – ஹரிபாவ் கிஷன்ராவ் பாக்டே, மராட்டிய சட்டசபையின் முன்னாள் சபாநாயகர்
பஞ்சாப் – குலாம் சந்த் கட்டாரியா
சத்தீஸ்கர் – ராமன் தேகா
மேகலா – விஜயசங்கர்
ஜார்கண்ட் – சந்தோஷ் கன்வார்
தெலுங்கானா – ஜிஷ்ணு தேவ் சர்மா
அசாம் – லக்ஷ்மன் பிரசாத் ஆச்சார்யா (மணிப்பூர் – கூடுதல் பொறுப்பு)
சிக்கிம் – ஓம் பிரகாஷ் மாத்தூர்
அதேபோல் பஞ்சாப் மாநில ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோகித் தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து குடியரசுத் தலைவர் அதை ஏற்று புதிய ஆளுநரை நியமித்தார். அதே நேரத்தில், ஆளுநர் ஆர்.என். ரவியின் பதவிக்காலம் இம்மாதத்துடன் முடிவடைவதால், தமிழகத்தின் புதிய கவர்னர் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் கவர்னர் ஆர்.என்.ரவியின் பதவிக்காலம் நீட்டிக்கப்படும் என கூறப்படுகிறது.