தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் வெளியில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக கோவை, நீலகிரி, சென்னை போன்ற பகுதிகளில் கனமழை பெய்து குளிர்ந்த காலநிலை நிலவி வருகிறது.
இந்நிலையில், தமிழகம், புதுவை, காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் உள்ள மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல், சென்னையைப் பொருத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் கோவை, நீலகிரி, தென்காசி, தேனி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் (அதாவது காலை 10 மணி வரை) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.