சென்னை: சருமத்தை அழகு படுத்துவதற்கு வீணான முறையில் பணத்தை செலவழித்து வாங்குவதை விட வீட்டில் ஃபேஸ் பேக் தயாரித்து பயன்படுத்துவது தான் சிறந்தது. ஏனெனில் அவை சருமத்திற்கு இயற்கை அழகை கொடுத்து மேலும் சருமத்தை பளபளப்பாக மாற்ற உதவி செய்கின்றன. அப்படி எளிய முறையில் செய்ய உதவும் பேஸ் பேக் எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
பெருஞ்சீரகம் – 1 ஸ்பூன்
தேன்- 1 ஸ்பூன்
தயிர்- 1 ஸ்பூன்
செய்முறை: முதலாவது பெருஞ்சீரகத்தை கொர கொரப்பாக அரைக்கவும். இதோடு தேன் மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். அதன்பின் இந்த கலவையை உங்கள் முகத்திலும் கழுத்திலும் பிரஷ் கொண்டு தடவவும். 10 நிமிடங்கள் கழித்து உங்கள் முகம் மற்றும் கழுத்தை குளிர்ந்த நீரில் கழுவவும். இப்படி செய்து வர உங்கள் முகம் பளபளப்பாக மாறும்.
பெருஞ்சீரகம் உடலுக்கு பலவிதமான நன்மைகளை தருகிறது. இதில் தாமிரம், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் நிறைந்துள்ளன. இது இயற்கையாகவே உங்கள் சருமத்திற்கு எக்ஸ்ஃபோலியேட்டராக பயன்படுவதால் உங்கள் சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்ற உதவுகிறது.
மேலும் இந்த பேக்கிற்கு பயன்படும் தயிர் சருமத்தை புத்துயிர் பெற செய்கிறது. அதுமட்டுமல்லாமல் இந்த பேக்கில் இருக்கும் தேன் உங்கள் முகத்தை பொலிவு படுத்த உதவுகிறது. மேலும் முகப்பருவுக்கு சிகிச்சையளிக்கவும் உதவுகிறது. உடலுக்கு பல நன்மைகளை கொடுப்பது மட்டுமல்லாமல் முகத்தை அழகுபடுத்த கூட இந்த பொருள்கள் அதிகமாக பயன்படுகிறது.