தேவையான பொருட்கள் :
சிவப்பு காராமணி – 250 மிலி
பெருங்காய தூள் – 1/4 தேக்கரண்டி
உப்பு – 1 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி
இலவங்கப்பட்டை, கிராம்பு, ஏலக்காய்,வெங்காயம் – 2
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2
இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
தக்காளி விழுது, காஷ்மீரி மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
சீரகப் பொடி – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் – 1 1/2 தேக்கரண்டி
கரம் மசாலா – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி தழை – தேவையான அளவு
செய்முறை :
சிவப்பு காராமணியை 8 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும். முந்தைய நாள் இரவே ஊற வைக்கலாம். ஊற வைத்த காராமணியை பிரஷர் குக்கரில் சேர்த்து உப்பு, மஞ்சள் தூள், பெருங்காய தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து 4 முதல் 5 விசில் வைத்து வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பெருஞ்சீரகம், சோம்பு,பட்டை ஏலக்காய் சேர்த்து 2 நிமிடம் வதக்கிய பின்னர் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
இஞ்சி பூண்டு விழுது, பச்சை மிளகாய், தக்காளி சாறு சேர்த்து பச்சை மணம் நீங்கும் வரை கொதித்த பின்னர் உப்பு, காஷ்மீரி சிவப்பு மிளகாய் தூள், சீரக தூள்,மல்லி தூள், சேர்த்து நன்கு கிளற வேண்டும். இந்த கலவையோடு வேகவைத்த காராமணியை தண்ணீரோடு மசாலாவில் சேர்த்து மிக்ஸ் செய்து நன்கு கிளறிவிட வேண்டும். கிரேவி கெட்டியாக வேண்டாம் என்றால் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கிளறி கொள்ளலாம். கடாயை மூடி 10 நிமிடம் மிதமான சூட்டில் வேகவைத்து கடைசியாக கரம் மசாலா சேர்த்து கிளறிவிட்டு கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கினால் மணக்க மணக்க காராமணி கிரேவி சாப்பிட தயார்.